கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

 


 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கொடுர் ஊராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில்  புனரமைக்கப்பட்ட இந்த திருக்கோவிலில்  கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 



முன்னதாக விழாவையொட்டி யாகசாலை அமைத்து யாக பூஜைகள், கணபதி ஹோமம், அனுக்கை பூஜை, நவக்கிரக ஹோமம், கோபூஜை, லட்சுமி குபேர பூஜை,தனதான்ய பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், முதலாம் கால யாக பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜை, மங்கல இசை, நாடி சந்தானம் சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடைபெற்றன. பின்னர் யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு சரியாக 8.30 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


 

பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது பக்தர்கள் மனம் உருகி ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷம் எழுப்பி ஆஞ்சநேயரை வழிபட்டனர் தொடர்ந்து  அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாட்டை கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர் இதில் அதிமுக மீஞ்சூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி எஸ் வினோத் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணப்பிரியா வினோத் உள்ளிட்ட  கொடுர் ஊராட்சி சேர்ந்த  பலர்  பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments