காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவியருக்கு ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது



2026 2027 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியருக்கான அறிமுக பயிற்சி முகாமின் இரண்டாம் நாள் நிகழ்வாக  கல்லூரியின் உமையாள் அரங்கில் ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.  கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தியின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மதுரை நிகில் பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனரும் தலைமைப் பயிற்சியாளருமான சோம நாகலிங்கம் IRS கலந்துகொண்டு மாணவர்களுக்கு மனசா..புத்தியா..என்ற தலைப்பில் ஆளுமை மேம்பாட்டு பயிற்சியளித்தார். அதன்பின் கல்லூரியின் புவி அமைப்பியல் துறைத் தலைவர் முனைவர் உதய கணேசன் கல்லூரியின் நிர்வாகக் கட்டமைப்பு குறித்தும், பாடங்கள் குறித்தும் விளக்கிக் கூறினார். தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் கோமளவல்லி  பாடத்திட்டம் குறித்தும், தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு முறை குறித்தும் எடுத்துரைத்தார். வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் வேலாயுத ராஜா,தமிழ் துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் அனிதா மற்றும் புவி அமைப்பியல் துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் தினேஷ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Post a Comment

0 Comments