தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் காரைக்குடியில் நடைபெற்றது

 


தமிழக வெற்றிக் கழகம் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்  ஆட்சியின் 100 நாள் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், சிவகங்கை மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் காரைக்குடி திருச்சி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தனியார்  மகாலில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு, தமிழக கனிமவளத்துறை அமைச்சர் காரைக்குடி சட்டமன்ற  உறுப்பினர் டாக்டர் டி.கே. பிரபு தலைமை வகித்தார்.



கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சிவகங்கை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, நகர மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் 100 நாட்களில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், அரசின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.மேலும், தமிழக மக்களின் நலன், அடிப்படை வசதிகள், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் நிர்வாகிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பேசினர்.



கட்சியின் வளர்ச்சிப் பணிகள், எதிர்கால செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களிடம் அரசின் சாதனைகளை கொண்டு சேர்ப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட, நகர மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் மற்றும் மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என உறுதியேற்றனர்.இதனால் காரைக்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments