கும்மிடிப்பூண்டி அருகே அருள்மிகு ஸ்ரீ துலக்காணத்தம்மன் ஆலயத்தில் 13-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது



திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன வழுதலம்பேடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ துலக்காணத்தம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் 13-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியவுடன் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து வந்தனர்.



தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல்,கூழ் ஊற்றுதல்,பால்குடம் ஊர்வலம்,கங்கை திரட்டுதல், உள்ளிட்டவை நடைபெற்றது. நாள்தோறும் மூலவருக்கு பால்,தயிர்,சந்தனம், ஜவ்வாது,பன்னீர்,உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. விழாவின் முக்கிய நாளான நேற்று காப்பு கட்டி விரதம் இருந்த 120-க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி,உடல் முழுவதும் சந்தனம் மலர்களால், அலங்காரம் செய்து ஸ்ரீ துலக்காணத்தம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் ஒருவருக்கு பின் ஒருவர் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.



தீமிதி திருவிழாவை முன்னிட்டு இரவை பகலாக மாற்றும் வகையில் கண் கவர் வான வேடிக்கை நடைபெற்றது இதில் கிராம பொதுமக்கள், சின்ன வழிதலம் பேடு.,பெரிய வழுதலம்பேடு ,ஒபசமுத்திரம் ஏளாவூர், இராஜபாளையம் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் தொழிலதிபர் ஓ, எம் கிருஷ்ணன்,. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காளத்தி. ,தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த துலக்காணத்தம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



Post a Comment

0 Comments