திருக்குவளையில் ஸ்ரீ பாலமுனீஸ்வரர் ஆலய 16-ஆம் ஆண்டு ஆடி பெருந்திருவிழா..... திரளான பக்தர்கள் பங்கேற்பு



நாகை மாவட்டம் திருக்குவளையில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ பாலமுனீஸ்வரர் ஆலயத்தில் 16-ஆம் ஆண்டு ஆடி பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.விழாவையொட்டி, வேண்டியவர்களுக்கு வேண்டிய வரங்களை வழங்கும் ஸ்ரீ பாலமுனீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு அருளாசி பெற்றனர்.

ஆடி பெருந்திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்ற நிலையில், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா முழுவதும் பக்தர்கள் பங்கேற்பால் ஆலய வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



ஆலய விழா ஏற்பாடுகளை அகரவெளி கிராமவாசிகள் மற்றும் கோவில் மருளாளிகள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். விழாவையொட்டி ஆலய வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தன.ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஆடி பெருந்திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ பாலமுனீஸ்வரர் சுவாமியை வழிபட்டு வருகின்றனர்.

 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments