நாகை: குருவை சாகுபடி பாதிப்புக்கு ஏக்கருக்கு நிவாரணம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள்..... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கம்.....



நாகை மாவட்டம் கீழ்வேளூர்,குருவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டதால் ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்திற்காக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், ஜல்ஜீவன் திட்டப் பணிகளை விரைந்து முடித்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, கீழ்வேளூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாழக்கரை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், எம்எல்ஏ டி.லதா பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

கட்சியின் கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.முருகையன், கிளைச் செயலாளர்கள் எஸ்.அன்பழகன், டி.தனபாலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 திருக்குவளை செய்தியாளர் த. கண்ணன்

Post a Comment

0 Comments