அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் 27 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று அனைத்துப்பள்ளி மாணவர்களுக்கான கலைத்திறன் போட்டிகள் , அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
செயலாளர் ராஜா, பொருளாளர் விஸ்வமூர்த்தி, இணைச்செயலாளர் கார்த்திகேயன், துணைச்செயலாளர் காசிநாதன், மக்கள் தொடர்பு அலுவலர் மு பழனித்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கராத்தே கண்ணையன் சிறப்பு விருந்தினராகப்பங்கேற்று, போட்டிகளைத்தொடங்கி வைத்தார்.
திருக்குறள்,பேச்சு, ஓவியம், கட்டுரை உள்ளிட்ட 11 போட்டிகள் 21 பிரிவுகளில் நடத்தப்பெற்றன.புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 43 பள்ளிகளிலிருந்து 1250 மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிறைவாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளித்தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவி சிந்து சரவணன் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குச் சான்றிதழ்கள், நினைவுப்பரிசுகள் மற்றும் அறிவிக்கப்பெற்ற ரொக்கப்பரிசுளை வழங்கி வாழ்த்தினர்.முன்னதாகச் செயற்குழு உறுப்பினர் சேகர் அனைவரையும் வரவேற்றார்.நிறைவாக ஜூனியர் கிளப் உறுப்பினர் சங்கீத்குமார் நன்றி கூறினார்.
போட்டி ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர்கள் பாலன்,ரஜினி, வேணுகோபால்,ஜெயச்சந்திரன், வெங்கடேசன், நந்தகுமார்,ராஜமுருகன், விஜய், மனோகர், பார்த்திபராஜா, பரக்கத்துல்லா, கார்த்திக் மாணிக்கம், தனலட்சுமி சரவணன், வினோத்குமார், சக்திகுமரன், அதிஷ்டா வெங்கடேசன், மற்றும் ஜூனியர் கிளப் உறுப்பினர்கள் ராஜேஷ், ஹர்ஷா, கிரண், எழில் முருகன், ஆகாஷ்,சதீஷ், மனோஜ், விஷ்வா, சுபாஷ் சந்திரன்,ஹரி பிரசாத், பரத், ஸ்ரீராம், சுரேந்திரன்,பேரெழில்,பிரியா சங்கீத்குமார்,சரணிதா,நேத்ராகாந்தி,ஹரிணி,நிகில்ராஜ், ஆகிபா,பிரியதர்ஷினி,பராஸ் அகமத்,கீர்த்தன்யா, பயாஸ் அகமத், சேணவி, ஷிவானி,சுபிக்ஷா உள்ளிட்ட பலரும் செய்திருந்தனர்.












0 Comments