காரைக்குடி பர்மா காலனி, தாமரை வீதியில் செயல்பட்டு வருகிறது டிராப்ஸ் முதியோர் இல்லம் (DROPSS OLD AGE HOME). இந்த முதியோர் இல்லம் செலுத்த வேண்டிய மின் கட்டணம் ரூ4,39,743 என மின்வாரியம் தெரிவித்தது.இதனால் முதியோர் இல்ல நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த முதியோர் இல்லத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் ரூ.6,335; ஏப்ரல் மாதம் ரூ 7,274 மின் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது ரூ.4,39,743 செலுத்த வேண்டும் என மின்வாரியம் அனுப்பிய தகவலால் முதியோர் இல்ல நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து தவறு நடந்ததாக ஒப்புக் கொண்ட மின்வாரிய அதிகாரிகள் தற்போது அபராதத்துடன் ரூ15,020 கட்டணம் செலுத்த வேண்டும் என அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.

0 Comments