கும்மிடிப்பூண்டி சிப்காட் தோல்பேட்டையில் உள்ள எஸ் எஸ் சி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ரத்ததான முகாமில் 522பேர் ரத்த தானம் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள எஸ் எஸ் சி தொழிற்சாலை சார்பில் ரோட்டரி சங்கத்தோடு இணைந்து கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள சிப்காட் உற்பத்தியாளர்கள் சங்க வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.
இந்த முகாமில் நிறைவில் வி எச் எஸ் ரத்த வங்கிக்கு 243 பேரும்,இந்து மிஷன் ரத்த வங்கிக்கு 156 பேரும், அடையார் புற்றுநோய் மையத்திற்கு 123 பேரும் என 522 பேர் ரத்த தானம் செய்தனர்.
இந்த ரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளை எஸ்ஏசி நிறுவன அதிகாரிகள் முன் நின்று நடத்தினர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.




0 Comments