பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 69 வது குருபூஜை முன் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆய்வு



ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப். 11ஆம்  தேதி தியாகி  இம்மானுவேல் சேகரனாரின் 69 வது நினைவு நாள் மற்றும் குருபூஜை  கொண்டாடப்பட உள்ளது .இந்த நிகழ்வில் ,தவெக ,  திமுக அதிமுக விடுதலைச் சிறுத்தைகள்,            புதிய தமிழகம் பாட்டாளிமக்கள் கட்சி ஜான்பாண்டியன் கட்சி கம்யூனிஸ்ட்   உள்ளிட்ட மாநில கட்சிகளும் பாஜக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மத்திய அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்புகளும்       ,பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள் . அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வந்து செல்வதற்கான வழித்தடங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்   .இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  சந்தீஷ் ஆகியோர் பொதுமக்கள் வந்து செல்லும் வழிகள்தடங்கள்  ,  வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் ,பொதுமக்கள் அதிகமாக கூட கூடிய பகுதிகள், ,மணிமண்டபத்துக்குள் பொதுமக்களை அனுமதிப்பதற்கான வழிகள் ,நினைவிடத்தில் கூட்ட நெரிசலை தடுப்பதற்கான பாதுகாப்பு உள்ளிட்டவைகளை குறித்து நேரில்  ஆய்வு செய்தனர். 

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல்மாறன் , பரமக்குடி வட்டாட்சியர் வரதராஜன்           ,    பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராமலிங்கம் , பரமக்குடி டிஎஸ்பி உள்ளிட்ட வருவாய் மற்றும்  காவல்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments