கீழ்வேளூர் கடைத்தெருவில் கேப்டன் விஜயகாந்த் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை



நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் கடை வீதியில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் பத்ம பூசன் "கேப்டன்" விஜயகாந்த் அவர்களின் 74-வது பிறந்தநாள் விழா வறுமை ஒழிப்பு தினமாக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.



இவ்விழாவிற்கு பேரூர் முன்னாள் செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பேரூர் நகர செயலாளர் ஜீ.பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட தொழிற்சங்க துணை செயலாளர் வீரமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.



நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கழக செயலாளர் நாகை பிரபாகரன் பி.பி.எ கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏ.பிரபாகரன் ஜீ. பக்கிரிசாமி,நாகை நகர செயலாளர் செல்வகுமார்,நாகை ஒன்றிய செயலாளர் ஜீ.எஸ்.பாஸ்கரன்,முன்னாள் பேரூர் கழகசெயலாளர்கள் லத்தீப், பகதூர் பாட்ஷா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும்  தேமுதிக நிர்வாகிகள் விஜயகுமார், வினோத், தியாகராஜன், திவான், ஆனந்த், பிரதீப்  உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 நாகை மாவட்ட செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி

Post a Comment

0 Comments