ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 80-வது சுதந்திர தின விழா இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவின் தொடக்கமாக, மனதை உருக்கும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன், திருவாடானை நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டு விழா முறைப்படி தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, திருவாடானை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரேவதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த விழாவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி ஆண்டனி ரிஷாந்தேவ், திருவாடானை வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுரேஷ், செயலாளர் ஜெகன், மூத்த வழக்கறிஞர்கள் சிவராமன், கண்ணன் மேலும், ஏராளமான இளம் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

0 Comments