திருப்பத்தூர் அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி



சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் வள்ளியம்மை ஆச்சி உயர்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் வெற்றிவேல் வரதராஜன் (பொ) கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக போதை ஒழிப்பு பொறுப்பு ஆசிரியர் கலைச்செல்வி பள்ளி மாணவ மாணவிகளிடத்தில் போதை பழக்கவழக்கத்தினால் ஏற்படும் உடல் பாதிப்புகள் மற்றும் சமூகக் கேடுகள் குறித்தும் விளக்கினார். 


தொடர்ந்து மாணவ மாணவிகள் மத்தியில் போதை பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பதாதைகள் வழங்கி பேரணியை வழிநடத்தினார். தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற  பேரணி போதை ஒழிப்பு வாசகங்களை முழக்கமிட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments