ஆவுடையார்கோயில் அருகே அரசு கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது



ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியத் திருநாட்டின் 80 ஆவது சுதந்திர தின விழா நடைபெற்றது. 

கல்லூரி முதல்வர் பொறுப்பு முனைவர் து.சண்முகசுந்தரம் அவர்கள் தலைமை  தாங்கி, மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் தமது சிறப்புரையில், " நம் நாட்டின் 80 ஆவது சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உங்களை வாழ்த்துவதில் நான் பெரு மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கின்றேன்.  1947 க்கு முன்புவரை நம் இந்தியா ஆங்கிலேயர்களிடத்தில் அடிமைபட்டுக் கிடந்தது. இன்று நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரத்திரத்திற்க போராடி, இரத்தம் சிந்தி , உயிரையும் நீத்த நம் முன்னோர்களை நாம் ஒவ்வொரு நாளும் நினைத்துப் போற்ற வேண்டும்.

 சுதந்திர போராட்டத்தில் நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்களில் குறிப்பிடத்தகுந்தவர் நம் அண்ணல் காந்தியடிகள்.அகிம்சை வழியில், சத்திய நெறியில் இந்திய விடுதலைக்காகப் போராடி வெற்றி கண்டவர்.அதைப்போல சுபாஷ் சந்திர போஸ், வீரத்தின் வழியில் இந்திய சுதந்திரத்திற்காகப் போராடினார்.நாம் இன்றைய நம் வாழ்க்கையில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண போராடும்போது காந்தியடிகள் காட்டிய அகிம்சை வழியிலேயே போராடி வெற்றி காண வேண்டும். அந்த வெற்றிதான் நிலைக்கும்" என்று பேசினார்.

விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், அலுவலகப்பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பலரும் பங்கேற்று, மூவர்ணக்கொடிக்கு வணக்கம் செலுத்தி வாழ்த்திப் போற்றினர்.

Post a Comment

0 Comments