வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி வட்டாரம் கண்டியூர் புதுவயல் கிராமத்தில் வேளாண்மை துணை இயக்குனர் செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இப்பயிற்சியில் அவர் கூறியதாவது நெல் சாகுபடியில் மண் பரிசோதனை அடிப்படையில் அங்கக உரங்கள், இரசாயன உரங்கள் மற்றும் உயிர் உரங்களை ஒருங்கிணைத்து பயன்படுத்துவது ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை எனப்படுகிறது. இதன் மூலம் பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை சரியான அளவில் வழங்குவதுடன், உரச்செலவையும் குறைக்க முடியும்.
விவசாயிகள் முதலில் மண் பரிசோதனை செய்து, மண்வள அட்டையின் பரிந்துரைப்படி உரமிட வேண்டும் என கூறினார். இயற்கை முன்னோடி விவசாயி கருப்பு அவர்கள் மீன் அமிலம்,தொழுஉரம், பசுந்தாள் உரம், உயிர் உரங்கள் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிர் உரங்களைப் பயன்படுத்துவது மண் வளத்தை மேம்படுத்த உதவும் என கூறினார். துணை வேளாண்மை அலுவலர் மனோஜ்குமார் அவர்கள் வேளாண் இடுபொருட்கள் பற்றி கூறினார்.
உதவி வேளாண்மை அலுவலர் நவநீதகிருஷ்ணன் அவர்கள் நெற்பயிருக்கு தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை பயிரின் வளர்ச்சிப் பருவத்திற்கு ஏற்ப வழங்க வேண்டும். இரசாயன உரங்களை ஒரே முறையில் அதிகமாக இடாமல், பரிந்துரைக்கப்பட்ட அளவில் பிரித்து மேலுரமாக இடுவதன் மூலம் ஊட்டச்சத்து பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கலாம் என கூறினார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சூர்யா அவர்கள் உர வீணாவதை குறைத்தல், உரச்செலவை குறைத்தல், மண் வளத்தை பாதுகாத்தல், ஊட்டச்சத்து பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையை கடைப்பிடித்து அதிக மகசூலும் அதிக வருமானமும் பெறலாம்பற்றி கூறினார். உதவி தொழில் நுட்ப மேலாளர் சதீஷ்குமார் ஊட்டச்சத்து மேலாண்மை செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.

0 Comments