தேவதானப்பட்டி எஸ்.ஐ நாகராஜனுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவம்

 


தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவில், சிறப்பாகப் பணியாற்றிய தேவதானப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் நாகராஜனுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிக் கௌரவித்தார்.

​விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் இரா. வைத்திநாதன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, காவல்துறைப் பணியில் சிறந்த முறையில் செயல்பட்டு சிறப்பாகப் பணியாற்றிய தேவதானப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் நாகராஜனின் சேவையை பாராட்டி, அவருக்குப் பாராட்டுச் சான்றிதழை ஆட்சியர் வழங்கினார்.

​இந்நிகழ்ச்சியின் போது, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் மற்றும் பல்வேறு அரசுத் துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்து அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments