கீழ்வேளூர் ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற துளிர் அறிவியல் வினாடி வினா போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட குருக்கத்தி பிரைம் கல்வி நிறுவனத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் அறிவியல் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றன.
19.08.2026 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற போட்டிகளை குருக்கத்தி DIET முதல்வர் முனைவர் கி. அன்புமுத்து தொடங்கி வைத்தார்.மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தையும், அறிவியல் சிந்தனையையும் வளர்க்கும் நோக்கில் நடைபெற்ற இந்தப் போட்டிகள் உயர்தொடக்க நிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டன.இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது அறிவியல் அறிவுத் திறனை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கீழ்வேளூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் திரு. வ. சுப்ரமணியன் மற்றும் திரு. க. அன்பழகன் ஆகியோர் பரிசுகளை வழங்கி, மாணவர்களை பாராட்டினர்.
அறிவியல் அறிவை வளர்ப்பதுடன், மாணவர்களின் சிந்தனைத் திறன் மற்றும் போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த துளிர் அறிவியல் வினாடி வினா போட்டி மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்


0 Comments