அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் 27 ஆம் ஆண்டு விழாவின் முதற்பகுதியாக, அனைத்துப்பள்ளி மாணவ, மாணவியருக்கான விளையாட்டுப்போட்டிகள், அறந்தாங்கி- புதுக்கோட்டை சாலை, அழியாநிலை ஆஞ்சநேயர் கோயில் அருகே அமைந்துள்ள டாக்டர் தஸ்தஹீர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் வி.சுப்பிரமணியன் அவர்கள் தலைமை தாங்கினார்.விளையாட்டுப்போட்டிகளில் ஓட்டம்,நீளந்தாண்டுதல், குண்டெறிதல், வட்டெறிதல், தொடர் ஓட்டம் மற்றும் சிலம்பப்போட்டிகளும் இளையோர், மேலோர் மற்றும் மேன்மேலோர் ஆகிய பிரிவுகளில் ஆடவர் மகளிருக்கென தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன.
முன்னதாக அறந்தாங்கி டி இ எல் சி நடுநிலைப்பள்ளி எதிரில் இருந்து ஒலிம்பிக் தீப ஓட்டம் தொடங்கியது.அறந்தாங்கி காவல் ஆய்வாளர் டி.சையது அலி அவர்கள் தொடங்கி வைத்தார். ஒலிம்பிக் தீப ஓட்டம் அண்ணா சிலை, கட்டுமாவடி முக்கம், பெரிய கடைவீதி , நாயக்கர்பட்டி வழியாக விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பெற்றது.செயற்குழு உறுப்பினர் டி.மனோகர் ஒலிம்பிக் உறுதிமொழியை வாசித்தளிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.தமிழன் அசோசியேசன் கிரிக்கெட் கிளப்பின் தலைவர் டான் எஸ்.சத்தியமூர்த்தி போட்டிகளைத்தொடங்கி வைத்தார். அறந்தாங்கி முன்னாள் கூட்டுறவு நகர வங்கித்தலைவர் ஆதி.மோகன்குமார் மாணவர்களை வாழ்த்திப்பேசினார்.
விளையாட்டுப்போட்டிகளில் 31 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச்சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். விளையாட்டுப்போட்டிகளில் அதிக வெற்றிப்புள்ளிகளைக்குவித்த அரசர்குளம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பெண்களுக்கான கே.பி.ஸ்போர்ட்ஸ்சாம்பியன்ஷிப் கோப்பையும், ரூபாய் 5027 ரொக்கப்பரிசும் வழங்கப்பெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சிங்கப்பூர் தொழிலதிபர் வி.விவேகானந்தன், தொழிலதிபர் சிட்டங்காடு ரஞ்சன் வழக்கறிஞர் சுப்பிரமணியன், பி எல் ஜி.பாலு , பஞ்சாத்தி ஆசிரியர் ரவிச்சந்திரன், மகிழங்கோட்டை ரவி ஆகியோர் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்புரை ஆற்றினர்.
முன்னதாக செயற்குழு உறுப்பினர் ட்டி.மனோகர் அனைவரையும் வரவேற்றார்.நிறைவாக கே.ஆர்.வெங்கடேசன் நன்றி கூறினார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.பழனித்துரை, துணைச்செயலாளர் சி.காசிநாதன், செயற்குழு உறுப்பினர் எஸ்.சக்திகுமரன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
போட்டி ஏற்பாடுகளை செயலாளர் எம்.ஜி.ராஜா, பொருளாளர் சு.விஸ்வமூர்த்தி, இணைச்செயலாளர் ப.கார்த்திகேயன், துணைச்செயலாளர் சி.காசிநாதன் ஆகியோர் வழிகாட்டுதல்படி, செயற்குழு உறுப்பினர்கள் என்.ஆர்.பாலன், எம்.ஜி.சேகர்,ஜெ.ரஜினி, கத்தார் எஸ்.பாலு,வீரசேகர், நாகராஜன் ஜி.வேணுகோபால், பா.வெங்கடேசன், சி.நந்தகுமார்,என்.ஆர்.ராஜமுருகன், சி.விஜய், டி.மனோகர், எஸ்.ப்பி.பார்த்திபராஜா, கே.பரக்கத்துல்லா, ப.கார்த்திக் ரா.மாணிக்கம், தனலட்சுமி எஸ். சரவணன், எம்.ஜி.வினோத்குமார், எஸ்.சக்திகுமரன், கே.ஆர்.வெங்கடேசன், மற்றும் ஜூனியர் கிளப் உறுப்பினர்கள் கா.சங்கீத்குமார்,கே.ஆர்.ராஜேஷ், எம்.ஜி.ஆர்.ஹர்ஷா, சு.கிரண், பி.எழில் முருகன், ஆர்.ஆகாஷ், வி.மனோஜ், கா.விஷ்வா, வி சுபாஷ் சந்திரன், பா.பரத், ஏ..ஸ்ரீராம், மு.சுரேந்திரன்,எம்.ஜி.ஆர்.சரணிதா, எம்.ஜி.வி.சிவானி உள்ளிட்ட பலரும் செய்திருந்தனர்.






0 Comments