கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு



 திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ளடக்கிய ஊராட்சிகளில் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  கிராம சபை கூட்டம் நடைபெற்றது குடிநீர் அடிப்படை வசதிகள் உள்ளிட்டுவை குறித்து விவாதிக்கப்பட்டது.



 புது கும்முடிபூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவை குறித்து கருத்துக்களை கேட்டு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுத்தப்பட்டது.



 இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ் பாபு  ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கிராம பொதுமக்கள்  கலந்து கொண்டனர் இதேபோன்று  பெரியஓபலாபுரம்  ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் சாமுவேல்   முன்னிலையில் நடைபெற்றது அப்போது பொது மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் சாலை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.


 தொடர்ந்து  பெத்திகுப்பம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது தொழிற்சாலை கழிவுநீரால் ஏரிகள் மாசு அடைவது குப்பை தூர்வாரதால் துர்நாற்றம் வீசுவது உள்ளிட்ட மக்கள் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது தொடர்ந்து  ஊராட்சி செயலாளர்  பிரபு     பற்றாளர் நந்தினி ஆகியோர் உடனடி தீர்வு காண தீர்மானம் நிறைவேற்றிய தொடர்ந்து சமரசம் ஏற்பட்டது இதில் கிராம மக்கள் அரசு துறை அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்  .

Post a Comment

0 Comments