திருக்குவளை அருகே முள்ளாச்சி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

 


நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த தெற்குப்பனையூரில் அமைந்துள்ள அருள்மிகு முள்ளாச்சி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் கால யாக பூஜை நிறைவு பெற்று மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.பின்னர் மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.



கும்பாபிஷேகத்தை காண திரண்டிருந்த பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.தொடர்ந்து முள்ளாச்சி மாரியம்மன் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



கோயில் செயல் அலுவலர் கார்த்திகேயன்,கும்பாபிஷேக விழா குழு தலைவர் ராஜா மகேஸ்வரி மற்றும் கிராமவாசிகள் பலர் பங்கேற்றனர்.

 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments