கீழக்கரையில் ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரிகளுக்கு சென்று கெட்டுப்போன கோழிகள், காலாவதியான எண்ணெய் பயன்படுத்தப்படுகிறதா? என அரசு அதிகாரிகள் ஆய்வு



ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர. இங்கு 21 வார்டுகளில் 100க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், டீக்கடைகள், பேக்கரிகள் இயங்கி வருகின்றன. நேற்று மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் கீழக்கரையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் கண்ணா தலைமையிலான குழுவினர். கீழக்கரையில் உள்ள அனைத்து ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரிகளுக்கு சென்று கெட்டுப்போன கோழிகள், நாள்பட்ட எண்ணெய்கள், பயன்படுத்தப்படுகிறதா? என்றும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில கடைகளில் நாள்பட்ட எண்ணெய்கள் பயன்படுத்துவது தெரிய வந்தது. நாள்பட்ட எண்ணைகளை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு கடை உரிமையாளர்களை எச்சரித்ததுடன் அபராதம் விதித்தனர். 

மேலும் சில உணவுப் பொருட்களை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இது போன்ற தரமற்ற பொருட்களை அதிகம் லாபம் பெரும் நோக்கில் பயன்படுத்தினால் கடையை பூட்டி கடைக்கு சீல் வைக்கப்படும்.என்று அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.




Post a Comment

0 Comments