ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நான்கு ரோடு சந்திப்புப் பகுதியில், திமுக மத்திய ஒன்றியம் சார்பில் அதன் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞரின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
முன்னதாக, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நகரச் செயலாளர் பாலா செய்திருந்தார்.
![]() |



0 Comments