சுதந்திர தினத்தை முன்னிட்டு திருக்குவளையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், இவ்ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி செபஸ்தியம்மாள் தலைமையில் திருக்குவளை சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி செயலர் சரவணபெருமாள் முன்னிலை வகித்தார்.பற்றாளராக கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலக ஊர் நல அலுவலர் ஜெயஶ்ரீ , மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன் ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் திட்டம் தொடர்பாகவும், விபிஜி ராம்ஜி பணிகள் தொடர்பாக கிராம மக்களிடம் எடுத்துரைத்தனர்.
கிராம சபை கூட்டத்தில் திருக்குவளை ஊராட்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்க வேண்டும். ஊராட்சியில் உள்ள அனைத்து பொது குளங்களில் உள்ள படித்துறைகளை பழுது நீக்கம் செய்து தர வேண்டும். ஜல் ஜீவன் திட்ட குடிநீர் திட்டத்தின் கீழான ஒப்பந்த பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் . திருக்குவளை பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள பழுதடைந்த கழிவுவறையை இடித்துவிட்டு புதிதாக நவீன கழிவறை அமைத்து தர வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் அனைத்து கட்சியின் நிர்வாகிகள் கிராம மக்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பங்கேற்றனர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்



0 Comments