நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா விடங்களூர் கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ கருப்பாயி அம்மன், அருள்மிகு ஸ்ரீ ஐயனார், அருள்மிகு ஸ்ரீ பால முனீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக மேல விடங்களூர் இடும்பன் கோயிலில் இருந்து புறப்பட்ட பால் காவடி, மயில் காவடி கன்னத்திலும், முதுகிலும் அலகு குத்தியவாறு மேளதாளங்களுடன் வான வேடிக்கை முழங்க சாட்டியகுடி கடைத்தெரு வழியாக ஸ்ரீ பால முனீஸ்வரர் கோயிலுக்கு சென்று பின்னர் ஸ்ரீ கருப்பாயி அம்மன் கோயிலுக்கு வந்தடைந்தது.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கால் பால்காவடி சுமந்து வந்த நிலையில் ஸ்ரீ கருப்பாயி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்



0 Comments