நாகை: போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு



திருக்குவளை அரசு மருத்துவமனை வளாகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருக்குவளை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் வீ. சசிக்குமார் தலைமை வகித்தார். போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நலம் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் ஒன்றிணைந்து போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.



இதில், போதைப்பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது, போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து எடுத்துரைப்பது உள்ளிட்டவற்றில் அனைவரும் உறுதியுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி மருத்துவர் நவீன்குமார், சித்த மருத்துவ அலுவலர் வசந்தகுமார், யோகா மற்றும் இயற்கை மருத்துவ அலுவலர் பி. வீரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், மருந்தாளுநர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் இதர மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. 

திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments