அறந்தாங்கி அரசு கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகப்போட்டி

 


ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி போதைப்பொருள் எதிர்ப்புக்குழுவின் சார்பில், கல்லூரி மாணவ, மாணவியருக்கான போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு குறு நாடகப்போட்டி கல்லூரித் திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் து.சண்முகசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். 



போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை  தலைப்பாகக் கொண்டு நடைபெற்ற குறுநாடகப்போட்டியில்  25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் குழுக்களாகப் பங்கேற்றனர்.



கல்லூரி கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் து. சண்முகசுந்தரம்  தமிழ்த்துறை விரிவுரையாளர் முனைவர் ச.கணேஷ்குமார், கணினி அறிவியல் துறை விரிவுரையாளர் முனைவர் வி. சண்முகப்பிரியா ஆகியோர் போட்டிக்கு நடுவர்களாகப்பணியாற்றினர்.

போட்டி ஏற்பாடுகளை கல்லூரி கணினி அறிவியல் துறை விரிவுரையாளரும், போதைப்பொருள் எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான முனைவர் த. செந்தில்குமார் செய்திருந்தார்.

Post a Comment

0 Comments