தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில், இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு, ஊராட்சி செயலர் பாண்டியராஜ் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் தலைமை தாங்கினர். பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக எருமலை நாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, டி. வாடிப்பட்டி மற்றும் சில்வார்பட்டி ஆகிய நான்கு ஊராட்சிகளை ஒருங்கிணைத்து நபார்டு வங்கியின் நிதி உதவி மூலம் மஞ்சளாறுஅணை பகுதியில் இருந்து புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் அமைக்க பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

0 Comments