திருவாடானையில் பாழடைந்த கிணற்றில் விழுந்த ஆடு பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்



ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, பிடாரிகோவில் தெருப் பகுதியில் உள்ள கோவில் அருகில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றில் அதே பகுதியைச் சேர்ந்த மகாதேவி என்பவருக்குச் சொந்தமான ஆடு தவறி விழுந்தது.உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில் வந்த வீரர்கள், ஆட்டைக் கயிறு மூலம் திறம்பட மீட்டனர்.

​இந்தக் கிணறு பாழடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், இதனைச் சரிசெய்யப் பலமுறை கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் இந்தக் கிணற்றை விரைந்து சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments