தேனி: பூதிப்புரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு..... பேரூராட்சி தலைவர் நேரில் ஆய்வு



தேனி மாவட்டம், பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு முல்லை பெரியாற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் குழாய் பிரதான பாதையில் 3 இடங்களில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக பூதிப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் உடனடியாக பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.

குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணிகளை பூதிப்புரம் பேரூராட்சி தலைவர்  கவியரசு பால்பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



Post a Comment

0 Comments