ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சென்ற லாரி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துள்ளானது . தெளிசாத்தநல்லூர் பகுதியில் நடந்த இந்த விபத்தைத் தொடர்ந்து, ஓட்டுநர் மற்றும் உடன் இருந்தவர்கள் லாரியை விட்டுவிட்டு தப்பி ஓட்டம். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரமக்குடி போலீசார், லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலைச் சீரமைத்தனர். தொடர்ந்து, லாரியிலிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

0 Comments