திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் கோளூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சமேத மாவலிங்கேஸ்வரர் மற்றும் எல்லையம்மன் அமைந்துள்ளது சிதிலமடைந்து காணப்பட்ட இத்திருத்தலத்தில் பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புறனமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஏழாம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி கோ பூஜை, முதல் கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்று வந்து இறுதி நாளான இன்று மகா தீபாரதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர் இதைத்தொடர்ந்து 48 நாள் மண்டலகம் முடிவடைந்தது தொடர்ந்து. ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி பூ அலங்காரமத்தில் கோவிலைச் சுற்றி மூன்று முறை வலம் வந்து திருவீதி உலா நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் கலந்து அம்மனை வழிபட்டனர்.தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு கோளூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.



0 Comments