புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும், அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 - 27ம் கல்விஆண்டிற்கான முதுகலை ஆங்கிலம், முதுகலை வணிகவியல் மற்றும் முதுநிலை கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் எம்ஏ., ஆங்கிலம், எம்.காம்., வணிகவியல், எம்.எஸ்ஸி., கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது . இதில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி பொறுப்பு முதல்வரும், கணினி அறிவியல் துறைத்தலைவருமான முனைவர் து. சண்முகசுந்தரம் அவர்கள், சேர்க்கைக்கான சான்றிதழ்களை வழங்கினார். கல்லூரி ஆங்கிலத்துறைத்தலைவர் பேராசிரியர் அ. கணேசன், வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் கு.சீனிவாசன், கண்காணிப்பாளர் பா. மகாராஜன் மற்றும் விரிவுரையாளர்கள் பலரும் உடன் இருந்தனர்.



0 Comments