திமுக முன்னாள் எம்எல்ஏ காதர் பாட்சா வெள்ளைச்சாமி நினைவு இடத்தில் நினைவேந்தல்

 


திமுக கழகத்தை வளர்த்த  முன்னோடியும் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினராக இருந்தவரும்  முன்னாள் எம்எல்ஏ  காதர்பாட்சா வெள்ளைச்சாமி  அவர்களின் 14 - ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கமுதியில் அவரது நினைவு இடத்தில் திமுக மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே. பிரவீன் தலைமையில் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். முன்னதாக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளர்          காதர் பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் அவரது சகோதரர் மூவேந்தன் ஆகியோரை சந்தித்து மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவீன் அய்யா நம்மோடு இல்லை என்றாலும், அவருடைய நினைவுகள் எப்போதும் நிலைத்திருக்கும். என்று ஆறுதல் கூறினார்.நிகழ்வில்  ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments