ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரை பகுதியில் சிலர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கீழக்கரை காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கீழக்கரை காவல் ஆய்வாளர் பத்மநாபன் உத்தரவின் பேரில், சார்பு ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான போலீசார் கீழக்கரை கருப்பட்டி முனியசாமி கோவில் அருகே ரகசியமாக கண்காணித்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கீழக்கரை ஷரிக் அகமது (28), ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் நிஜாந்தன் (27), அதே பகுதியை சேர்ந்த அஜய்குமார் (25), ராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்த அப்துல் ரஹ்மான் (26) ஆகியோர் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து சுமார் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட ஜிப்-லாக் கவர்களும் கைப்பற்றப்பட்டன.
இதுதொடர்பாக கீழக்கரை காவல் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் (NDPS) கீழ் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் சிறையில் அடைத்தனர்.கைப்பற்றப்பட்ட கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments