மயிலாடுதுறை கொண்டல் கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த கும்பாபிஷேகம் கடந்த 28 ந்தேதி அனுக்சை விக்னேஸ்வரர்பூஜை,தன பூஜையுன் தொடங்கி நடைபெற்று வந்தது கடந்த திங்கள்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவில் பூர்ணாஹுதி செய்யப்பட்டு யாகசாலை பூஜையில் யாகம் நிறைவடைந்த பின்னர் புனித நீர் அடங்கிய கடத்தை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி கோவிலை சுற்றி வலம் வந்து பின்னர் மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் கடம் புறப்பாடு கோபுர கலசத்திற்கு சென்றடைந்து சுப்பிரமணியர் சிவாச்சாரியார் தலைமையில் வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத கருடன் வட்டமிட பக்தர்கள் கர கோஷங்கல் எழுப்ப கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கருவரையில் மன்மத சுவாமி,அய்யனார்,திரௌபதி அம்மன் உள்ளிட்ட சுவாமிகளின் திருவுருவ சிலைக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராமவாசிகள்,பசுமை தாயகம் இளைஞர் அணி மன்றத்தினர்,மகளிர் சுய உதவி குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

0 Comments