தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி பேரூராட்சி, கெங்குவார்பட்டி பேரூராட்சி மற்றும் ஜி.கல்லுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது சொத்துக்கள் தொடர்பான பத்திரப் பதிவுகளை மேற்கொள்வதற்குத் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்திலேயே சார்பதிவாளர் அலுவலகங்கள் இருந்தபோதிலும், மக்கள் வேறு மாவட்டத்திலுள்ள வத்தலக்குண்டு பகுதிக்குச் சென்று பத்திரப் பதிவு செய்வதால் மிகுந்த சிரமங்களுக்கும் அலைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.
எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மேற்கண்ட வருவாய் கிராமங்களின் பத்திரப் பதிவுகளைப் பெரியகுளம் இணைச் சார்பதிவாளர் அலுவலகங்களிலேயே மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலத் துணைச் செயலாளர் தமிழன் தலைமையில், கட்சியின் நிர்வாகிகள், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
இந்நிகழ்வின் போது, கட்சி நிர்வாகிகள் தமிழ்வாணன், ஆண்டி, தமிழ்ச்செல்வன்,ஜோதிமுருகன், செல்வராஜ், குழந்தைராஜ், தாரூக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 Comments