கும்மிடிப்பூண்டியில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 3 கி.மீ.தூரம் வரை அணிவகுப்பு ஊர்வலம்



கும்மிடிப்பூண்டியில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 3 கி.மீ.தூரம் வரை அணிவகுப்பு ஊர்வலம் நடத்திய நிலையில்  பொது கூட்டத்தில் கொட்டும் மழையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நனைந்தபடி ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.



விஜயதசமி நாளில் தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு அதனை நினைவுப்படுத்தும் விதமாக இன்று நாடு முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக திருவள்ளுர்  மாவட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினர்  கும்மிடிப்பூண்டியில்   500-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சீருடை அணிந்து அணிவகுப்பு ஊர்வலமாக சென்றனர்.



சாமிரெட்டிகண்டிகையில் புறப்பட்ட ஊர்வலம் 3 கி.மீ. கடந்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.திருவள்ளூர் எஸ்பி சாய் பிரணீத் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பின்னர் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் பொது கூட்டம் நடைபெற்றது.அப்போது திடீரென கன மழை கொட்டியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பொது கூட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments