கும்மிடிப்பூண்டியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது..... கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார் கலந்துகொண்டார்......



திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 170 கருவுற்ற கர்பிணி தாய்மார்களுக்கு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மோகனா தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட தவெக செயலாளரும்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான கலந்துகொண்டு 170 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சேலை,பழவகைகள்,சத்துள்ள சிறுதானிய உணவுகள்,மங்கள பொருட்கள் அடங்கிய சீர்வரிசைகளை வழங்கியதுடன் மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனைகளை கவனமாக பின்பற்றவும,தற்போது தவெக ஆட்சியில் பெண்களுக்கு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை முதல்வர் விஜய் வழங்கி வருகிறார் என தெரிவித்தார் தொடர்ந்து 170 கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக வெற்றி கழக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் எஸ் விஜயகுமார் உணவுப்  பரிமாறி கர்ப்பிணிப் பெண்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.



இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் தீபலட்சுமி,அரசுத்துறை அதிகாரிகள் அங்கன்வாடி பணியாளர்கள்,தவெக நிர்வாகிகள் கிருபாகரன் . விஜய்பழனி அன்புமலர் அருண் அசோக் ஜோதி எம் எஸ் எஸ் சரவணன்.தசரதன். சுபாஷ்.. ஜோதி.மகளிர் அணி நிர்வாகிகள் இந்திராணி கண்மணி சுகாசினி சோபனா நகர நிர்வாகி மீனா. மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.



Post a Comment

0 Comments