தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோர் 12 சதவீதம் அதிகரிப்பு... - MAKKAL NERAM

Breaking

Saturday, December 3, 2022

தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோர் 12 சதவீதம் அதிகரிப்பு...

 

சேலம் மாவட்டத்தில் உள்ள காந்தி ரோட்டில் இருக்கும் வருமானவரித்துறை அலுவலகத்தில் வருமான வரி செலுத்துவோர் மற்றும் பட்டய கணக்காளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் பங்கேற்றார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறையில் 1 லட்சத்து 8000 கோடி வரை வசூல் செய்ய இலக்கு நிர்ணயப்பட்டதில் 53 சதவீதம் வசூலாகி இருக்கின்றது.அகில இந்திய அளவில் வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. வரி வசூலில் நான்காம் இடத்தில் இருக்கின்றது. சேலம் மண்டலத்தை பொறுத்தவரையில் வருமான வரி வசூலுக்கு 900 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இதில் 67 லட்சம் பேர் வருமான வரி செலுத்துகின்றார்களின் எண்ணிக்கை வருடம் தோறும் 12 சதவீதம் வரை அதிகரித்து வருகின்றது. கொரோனா காலகட்டத்திற்கு பின்பு வருமான வரி வசூல் 30 சதவீதம் அதிகரித்து இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment