திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் உயர் கல்விக்கு செல்ல வேண்டும் என்பதில் தமிழக பள்ளி கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள கல்லூரிகளில் உயர்கல்வி வாய்ப்புகளை கண்டறிவதற்கான கல்லூரி சுற்றுலா சென்று கல்லூரியில் உள்ள உயர்கல்வி வகுப்புகள் ஆய்வக வசதிகள் உள்ளிட்ட அனுபவங்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி,குடவாசல் ,நன்னிலம்,பூந்தோட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து நான் முதல்வன் திட்டத்தின் அடிப்படையில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 140 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் பல்கலைக்கழகத்தில் உள்ள இயற்பியல் வேதியல் கணிதவியல் பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளைச் சார்ந்த பாடங்கள் பற்றி செய்முறை மற்றும் அனைத்து துறைகளுக்கும் அழைத்துச் சென்று செய்முறை வகுப்புகளை கற்றுக்கொண்டனர் இந்த நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நாகராஜன் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை வழங்கினர்.
No comments