• Breaking News

    பெரியகுளம் வடக்கு ஒன்றிய திமுக சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

    மார்ச் 1ம் தேதி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டுநலத்திட்ட உதவிகள் ஏழைகளுக்கு உதவிகள் வழங்குவது குறித்த தேனி மாவட்டம் பெரியகுளம் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகி ஆலோசனை கூட்டம் தனியா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் எல்.எம். பாண்டியன் தலைமைதாங்கினார்.ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல்,ஒன்றிய அவை தலைவர் சாகுல் ஹமீதுமுன்னிலை வகித்தனர்.வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன்,பேரூர் செயலாளர் காசி விசுவநாதன்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன்,கெங்குவார்பட்டி பேரூர் செயலாளர்தமிழன்,கீழ வடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ்,மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் குள்ளபுரம் முருகன்,ஒன்றிய குழு சரவணன், பாலசுப்பிரமணி,ஈஸ்வரன்,செல்வி அன்ன பிரகாஷ், பாக்கியம் கண்ணன்,சில்வார்பட்டி ஊராட்சி மன்றதலைவர் பரமசிவம்,உதயசூரியன்,ராம்ஜி,தினேஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் இவர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை பகுதி வாரியாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளாகவும்,ஏழைகளுக்கு உதவிடுமாதையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    No comments