தீ விபத்து ஏற்பட்ட குடும்பத்திற்கு அரிசி,மளிகை சாமான்கள்,ரொக்கம் ரூ.2000 வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட தாசரிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் கொமரன் மனைவி கருப்பாள், என்பவர் வீட்டில் 25-02-2023 ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணியளவில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் துணிகள் எரிந்து சேதம் அடைந்தது, தகவல் அறிந்த கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். சரவணன் பாதிக்கப்பட்ட நபரை நேரில் சென்று பார்வையிட்டு,தன் சொந்த நிதியில் இருந்து அரிசி மற்றும் மளிகை சாமான்கள்,மற்றும் ரொக்கமாக ரூபாய் 2000 வழங்கி ஆறுதல் கூறினார்.மேலும் வருவாய் துறை மூலமாக பேரிடர் மேலாண்மை நிதி உதவி பெற்று தருவதாக கூறினார்.உடன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ் , ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் குருநாதாள், வடிவேலு ரங்கராஜ், வளர்ச்சிக் குழு உறுப்பினர் ராசு, வக்கீல் பழனிச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
மக்கள் நேரம் இணையதளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments