• Breaking News

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்...

     

    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்வது என இலங்கை கடற்படை வழக்கமாக வைத்துள்ளது. இதற்கு பல்வேறு கண்டங்கள் எழுந்த நிலையிலும், இதுபோன்று சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் 11 பேர் நேற்று சென்றனர். இன்று கோடியக்கரை தென்கிழக்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 11 மீனவர்கள் படகில் இருந்த நிலையில் 7 பேரை கடலில் தள்ளி சித்திரவதை செய்துள்ளனர். மேலும் 4 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியதுடன் மீனவர்களை கடலில் தள்ளி வலைகள், ஜி.பி.எஸ் கருவிகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 3 மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படை நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து மீனவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இலங்கை கடற்படையினரின் இது போன்ற தொடர் சம்பவங்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மீனவர்கள் சார்பில் வலுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

    No comments