அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் அழுகி சேதம் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரியும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் குழு பார்வையிடாததை கண்டித்து சுப்ரமணியபுரம் கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பருவம் தவறி பெய்த மழையால் டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகிப் போனது இதனை கணக்கெடுக்குவதற்காக தமிழக முதல்வர் அமைச்சர்கள் குழு அமைத்து பார்வையிட்டு ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தார். தமிழக முதல்வர் அமைத்த அமைச்சர்கள் குழு டெல்டா மாவட்டமான தஞ்சை,நாகை ஆகிய பகுதிகளை மட்டும் பார்வையிட்டு விட்டு திரும்பி சென்று விட்டனர் .இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெல் உளுந்து, கடலை உள்ளிட்ட பயிர்களை அமைச்சர்கள் குழு ஆய்வு செய்யாமலே அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உண்மையாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்ட கடலை,உளுந்து பயிர்களை ஆய்வு செய்யாமல் அமைச்சர்கள் குழு தமிழக முதல்வருக்கு அறிக்கை அனுப்பி இருப்பதால் புதுக்கோட்டை மாவட்ட விவசாய சங்கத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர் மேலும் உடனடியாக தமிழக முதல்வர் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல் உளுந்து கடலை பயிர்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி சுப்பிரமணியபுரம் கடைவீதியில் புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் அறிவித்த 20,000 நிவாரணம் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு இல்லை என்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment