திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி எஸ்டி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலமாக இந்த மாதம் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 63 ஆயிரத்து 976 எஸ்சி எஸ்டி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இதுவரை 56 சதவீதம் மாணவ மாணவிகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் ஆகவே வருகிற ஏப்ரல் மாதம் வரை விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகம் முன்பு வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முதல்வர் மாணவர்களின் நலன் கருதி கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கு காலக்கெடுவை உடனடியாக வழங்க வேண்டும் மேலும் திருவிக அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் குறிப்பாக கல்லூரியில் 70 சதவீதம் மாணவிகள் பயின்று வருகின்றனர் ஆகவே மாணவிகளுக்கு அதிக அளவில் கழிப்பறை வசதி மேம்படுத்தி தர வேண்டும், அது மட்டுமன்றி நாப்தின் கல்லூரி நிர்வாகத்தின் மூலமாக மாணவிகளுக்கு வழங்க வேண்டும்.
அதேபோன்று திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரியில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மேம்படுத்தி தர வேண்டும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேராசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் குறிப்பாக பெண் உடற்கல்வி பேராசிரியர் நியமனம் என்பது உடனடியாக செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments