நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து வழிக்காட்டும் பயணத்தை ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்
நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக அவர்களின் சிறந்த திறமையைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக மாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்றும் மறைந்திருக்கும் திறமை ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் விருதுநகர் மாவட்டம், பள்ளிக்கல்வித்துறை சார்பாக, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி, சாத்தூர் ஆகிய 6 ஒன்றியங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் 800 மாணவர்களை, “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம், மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் வழிகாட்டும் நோக்கில், மதுரையில் உள்ள பொறியியல், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு, அழைத்துச் செல்லப்பட்டு, உயர்கல்வியில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பயணத்தை மேற்க்கொண்ட 800 மாணவர்கள் 25 பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுடன் ஆட்சியர் ஜெயசீலன் உரையாற்றினர் வாழ்த்துக்கள் தெரிவித்து மாணவர்களின் பயணத்தை ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
No comments