தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை தாளவாடி வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை தாளவாடி அருகே உள்ள சேசன் நகர் வழியாக பாரதிபுரம் கிராமத்திற்குள் நுழைந்தது. விவசாய நிலங்கள் வழியாக சென்ற ஒற்றை யானை அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிரை காட்டு யானை சேதப்படுத்தியது. காட்டு யானை ஊருக்குள் நுழைந்ததை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒற்றை காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒற்றை காட்டு யானை விவசாய நிலங்கள் வழியாக ஓடியது. தொடர்ந்து காட்டு யானையை விரட்டிச் சென்ற நிலையில் காட்டு யானை பல கிலோமீட்டர் தூரம் ஓடி பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. காட்டு யானையை விடாமல் துரத்திச் சென்று விரட்டி அடித்ததால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
மக்கள் நேரம் இணையதளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments