சிறைத்துறை இயக்குநரின் "கூண்டுக்குள் வானம்" புத்தகம் வழங்கிட தேனி மக்களுக்கு அழைப்பு
சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின் இயக்குநர் அமரேஷ் புஜாரி இ.கா .ப அவர்களின் *கூண்டுக்குள் வானம்" என்னும் முன்னெடுப்பின் படி பொதுமக்களிடமிருந்து சிறைவாசிகளின் பயன்பாட்டிற்காக சிறை நூலகத்திற்கு புத்தகங்கள் தானமாக பெறப்பட்டு வருகிறது.
'நான் வாசித்த எல்லாவற்றின் ஒரு பகுதியே நான்' தியோடோர் ரூஸ்வெல்ட் என்பாரின் அறிவுரையின்படி,குற்றங்கள் புரிந்து சிறைபட்டவரை சீர்திருத்தி சமூகத்திற்கு அனுப்புவதே எங்கள் தலையாய கடமை.சிறைவாசிகளின் சீர்திருத்தத்தில் நல்ல புத்தகங்கள் பெரும்பங்காற்றுவதால் , இச்சீர்திருத்த முயற்சியில் பங்கேற்க விரும்பும் மக்கள், தேனி மாவட்டசிறை நூலகத்திற்கு புத்தகங்களை தானமாக வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வருகின்ற மார்ச் 2023 தேனியில் நடைபெறும் புத்தகத்திருவிழாவில் மாவட்டச் சிறை நிர்வாகத்தின் சார்பாக போடப்பட்டுள்ள புத்தக தான அரங்கிலோ அல்லது நேரடியாக மாவட்டசிறையிலோ தாங்கள் புத்தகங்களை வழங்கலாம். தங்களால் வரமுடியாத சூழலில் தாங்கள் விரும்பினால் நேரடியாக நாங்களே தங்களின் இல்லத்திற்கு வந்து புத்தகங்களை பெற்றுக்கொள்ளக் கடமைப்பட்டுளோம். புத்தக தானமளிக்க விரும்புவோர் 9791393494, 9080133477 இந்த அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மாவட்டச் சிறைக்கு புத்தகங்களை வழங்காலாமென தேனி மாவட்டச்சிறை பணியாளர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
No comments