வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் வைக்க ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்டம், பெரியகுளம் - கம்பம் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் இளங்கோ, முனைவர் சித்ரா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்வில், பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்க தலைவர் மணிவண்ணன், மற்றும் நிர்வாகிகள், பெரியகுளம் நகர் நல சங்க தலைவர் அன்புக்கரசன், தென்கரை கிளை நூலக நல் நூலகர் சவட முத்து, கீழ வடகரை ஊர்புற நூலகர் ராஜகோபால், குமரேசன் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன பணியாளர்கள், பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments