• Breaking News

    பெரியகுளம் நகராட்சி தலைவர் ஆணையாளரிடம் விசிக சார்பில் மனு

     

    தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 10, 11,12,13,14,15,16ஆகிய வார்டுகளில் வசித்து வரும் பொதுமக்கள் இறப்பு நிகழ்வின்போது நீர்மாலை என்னும் சடங்கிற்காக சுதந்திர வீதி பிள்ளையார் கோவில் அருகே -நகராட்சி குழாயை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் சாலை விரிவாக்க பணிகளுக்காகவும் சில சமூக விரோதிகளாலும்பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குழாயை உடைத்தும் கற்களை போட்டு மூடி விட்டனர்.இதனால் பொதுமக்கள் பணம் செலுத்தி டிராக்டர் மூலம் தண்ணீரை வாங்கி வந்து நீர் மாலை எடுத்து வந்தனர்.மேலும் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியை பயன்படுத்தி வந்ததால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.ஆகவே நகராட்சி நிர்வாகம் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த சுதந்திர வீதி பகுதியில் மேற்படி பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சின்டெக்ஸ் தொட்டி அமைத்து தர வேண்டுமென நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார்,நகராட்சி ஆணையாளர் புனிதன் ஆகியோரிடத்தில் கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம்,பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன்,நகரச் செயலாளர் ஜோதிமுருகன், சேகுவேரா,ஜெயராஜ் பரமன்,தங்கப்பாண்டி சக்திவேல்ஆகியோர்கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.

    No comments